sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

முரண்டுபிடிக்காமல் சொல்வதை கேட்டால் மீண்டும் நிதி: பாகிஸ்தானை நிர்பந்திக்கிறது அமெரிக்கா

/

முரண்டுபிடிக்காமல் சொல்வதை கேட்டால் மீண்டும் நிதி: பாகிஸ்தானை நிர்பந்திக்கிறது அமெரிக்கா

முரண்டுபிடிக்காமல் சொல்வதை கேட்டால் மீண்டும் நிதி: பாகிஸ்தானை நிர்பந்திக்கிறது அமெரிக்கா

முரண்டுபிடிக்காமல் சொல்வதை கேட்டால் மீண்டும் நிதி: பாகிஸ்தானை நிர்பந்திக்கிறது அமெரிக்கா


ADDED : ஜூலை 17, 2011 01:19 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன் : 'அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு விசா அளிக்க மறுத்தது மற்றும் பயிற்சி அளிக்க முகாமிட்டிருந்த அமெரிக்க வீரர்களை திருப்பி அனுப்பியது போன்ற விவகாரங்களில், பாகிஸ்தான் தன் முடிவை மாற்றிக் கொண்டால், நிறுத்தப்பட்ட ராணுவ நிதியுதவியை திரும்ப அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்' என, அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு வழங்கக்கூடிய ராணுவ நிதியுதவியில் மூன்றில் ஒரு பங்கை, சமீபத்தில் அமெரிக்க அரசு நிறுத்தி வைத்தது. தங்களின் கட்டளைகளை பாகிஸ்தான் நிறைவேற்றாவிட்டால், நிதியுதவி ரத்து செய்யவும் தீர்மானித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் நிர்வாகத்தினர், அமெரிக்கா உடனான உறவை பலப்படுத்தவும், அந்நாட்டு அதிகாரிகளை சமாதானப்படுத்தவும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் தலைவர் அகமத் சுஜா பாஷாவை, அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர். அவர், அமெரிக்க நிர்வாகத்தினரை சந்தித்து, நிதியுதவியை தொடர வேண்டும் என வலியுறுத்த உள்ளார். இதுபற்றி, பெயர் வெளியிட விரும்பாத பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இருநாடுகள் இடையிலான உறவு முறியவில்லை. புலனாய்வு விஷயங்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. கடினமான தருணங்களிலும் நாங்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.



இதற்கிடையில், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தி தொடர்பாளர் டேவ் லாபன் கூறியதாவது: பாகிஸ்தானுக்கான ராணுவ நிதியுதவி ரத்தாகி விட்டது என்று சொல்ல முடியாது. நிதியுதவியை நிறுத்தி வைத்தது எங்களுடைய நடவடிக்கைகளில் ஒன்று. பாகிஸ்தானில் பயிற்சி அளிக்க முகாமிட்டிருந்த எங்களது ராணுவ வீரர்களை, அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பியது. ராணுவ அதிகாரிகளுக்கு விசா கொடுக்கவும் மறுத்தது.

இந்த விஷயங்களில் எங்களுக்கு சாதகமான முடிவுகளை பாகிஸ்தான் எடுத்தால், நாங்கள் சொல்கிறபடி கேட்டால், உடனடியாக நிதியுதவி மீதான தடை நீக்கப்படும். நிதியுதவி வழங்குவது தொடரும்.பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கும் அமெரிக்க ராணுவ வீரர்களை குறைக்கும்படி எங்களிடம் கேட்டுக் கொண்டனர். குறைந்த பயிற்சியாளர்கள் இருக்கும் பட்சத்தில் அதிக ஆயுதங்கள் தேவையில்லை என்று குறைத்தோம். விசா கொடுக்கவும் மறுத்தனர். விசா தொடர்பான பிரச்னை இப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதும் நிலவும் பிரச்னையே. இந்த விவகாரங்களில் பாகிஸ்தான் மாற வேண்டும். மாறும் என, நம்புகிறோம். இவ்வாறு டேவ் லாபன் கூறினார்.








      Dinamalar
      Follow us