தற்கொலை செய்துகொண்ட எந்திர மனிதன்!: தென்கொரியாவில் கண்ணீர் அஞ்சலி
தற்கொலை செய்துகொண்ட எந்திர மனிதன்!: தென்கொரியாவில் கண்ணீர் அஞ்சலி
UPDATED : ஜூலை 04, 2024 01:57 PM
ADDED : ஜூலை 04, 2024 01:55 PM

சியோல்: தென் கொரியாவில் அரசு அலுவலகத்தில் பணியாளராக இருந்த ரோபோ ஒன்று ஓய்வின்றி அதீத வேலையில் ஈடுபட்டதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு 2வது தளத்தில் இருந்து முதல் தளத்திற்கான படிக்கட்டில் விழுந்து நொறுங்கியது. இது ரோபோவின் தற்கொலையாக பார்க்கப்படுவதாக கூறுகின்றனர்.
தொழில்நுட்பங்களின் வளர்ச்சி சில நேரங்களில் மனிதர்களுக்கு உதவினாலும், மனிதவளத்திற்கு ஆபத்தாகவும் முடிகிறது. தொழில்நுட்பத்தின் அடுத்தப் படிநிலையாக பார்க்கப்படும் ரோபோக்கள் மனிதர்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனிதர்கள் செய்யும் வேலைகளை சில நிறுவனங்கள் ரோபோக்கள் மூலம் செய்து, மனிதவள பயன்பாட்டை குறைத்து வருகிறது. அப்படி வேலை செய்யும் ரோபோ மனிதர்களை விட துரிதமாக வேலையை முடித்துவிடுகிறது. இதனால் ரோபோக்கள் ஓய்வில்லாமல் 'உழைத்து' வருகிறது.
அப்படி ஒரு ரோபோ ஓய்வின்றி உழைத்து தற்கொலையே செய்துள்ள நிகழ்வு அரங்கேறியுள்ளது. தென் கொரியாவில் உள்ள குமி நகர சபை அரசு அலுவலகத்தில் ஊழியர்களுக்கு உதவுவதற்காக 'ரோபோ' உருவாக்கப்பட்டது. அரசு ஊழியராகவே பார்க்கப்பட்ட அந்த ரோபோ திடீரென தற்கொலை செய்து கொண்டது அங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ரோபோ, அந்த அலுவலகத்தின் 2வது தளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை சுற்றிச் சுற்றி வந்ததாகவும், மிகவும் குழப்பத்துடன் காணப்பட்டதாகவும் அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் தெரிவித்தனர்.
![]() |