ADDED : நவ 03, 2024 10:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரிஸ்பேன்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்றார். பிரிஸ்பேனில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே ஜெய்சங்கர் பேசினார்.
அவர் பேசியதாவது:
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினர் 1,25,000 பேர் வசிக்கிறார்கள். இதில் 16,000 மாணவர்கள் குயின்ஸ்லாந்து பல்கலையில் படிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் 75 சதவீத ஏற்றுமதியானது, பிரிஸ்பேனில் இருந்துதான் இந்தியாவுக்கு வருகிறது.
இந்திய- ஆஸ்திரேலியா நட்புறவு, கடந்த 10 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மைல்கல்லை தொட்டிருக்கிறது. எதிர்காலத்தில் இந்த உறவு மேன்மேலும் வளரும்.
இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.