இந்தியா - ஜப்பான் நல்லுறவால் உலகில் வளம் பெருகும்: மோடி நம்பிக்கை
இந்தியா - ஜப்பான் நல்லுறவால் உலகில் வளம் பெருகும்: மோடி நம்பிக்கை
ADDED : செப் 22, 2024 05:51 PM

வில்மிங்டன்: 'இந்தியா, ஜப்பான் இடையிலான நல்லுறவு, உலக நாடுகளின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து இரு தரப்பு உறவுக் குறித்து பேசினார்.
மோடி கூறுகையில், ''ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.
அடிப்படை வசதி,மின் கடத்தி, பாதுகாப்பு, பசுமை எரிசக்தி மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பது குறித்து ஆலோசித்தோம். இரு நாடுகள் இடையிலான நல்லுறவு, உலக நாடுகளின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்,'' என்றார்.
ஜப்பான் பிரதமர் கிஷிடோ கூறுகையில், ''நான் இந்தியாவிற்கு சென்றபோது, என்னுடைய முதல் இரு தரப்பு சந்திப்பு சிறப்பாக இருந்தது. உலகளாவிய அமைப்புகளின் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் இரு நாடுகளும் தொடர்ந்து ஒத்துழைக்கும். ஜப்பானுக்கு பிரதமர் மோடியின் வருகையை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்,'' என்றார்.