இந்தியா - சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்ட மேஜை கூட்டம்
இந்தியா - சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்ட மேஜை கூட்டம்
ADDED : ஆக 27, 2024 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கப்பூர் : இந்தியா - சிங்கப்பூர் அமைச்சர்கள் இடையிலான முதலாம் வட்ட மேஜை கூட்டம் 2022ல் புதுடில்லியில் நடந்தது. இதன் இரண்டாவது கூட்டம் சிங்கப்பூரில் நேற்று நடந்தது.
நம் நாட்டில் இருந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றனர்.
சிங்கப்பூர் தரப்பிலான அமைச்சர்கள் குழுவுக்கு, அந்நாட்டு துணை பிரதமர் கான் கிம் யோங் தலைமை வகித்தார். அந்நாட்டின்வெளியுறவுத்துறை அமைச்சர் விவயன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.