பாக்., சிறையில் உயிரிழந்த இந்திய மீனவர்: தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலையாகாத பரிதாபம்
பாக்., சிறையில் உயிரிழந்த இந்திய மீனவர்: தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலையாகாத பரிதாபம்
ADDED : ஜன 24, 2025 09:49 PM

இஸ்லாமாபாத்: கராச்சி சிறையில் தண்டனைக் காலம் முடிந்தும் விடுவிக்கப்படாத இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எல்லை தாண்டியதாக கூறி இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் உள்பட பலரை பாகிஸ்தான் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது. அதில் பலர் தண்டனைக்காலம் முடிந்தும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை. அவர்களை உடனடியாக விடுதலை செய்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அரசு பாகிஸ்தானை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதனை பாகிஸ்தான் கண்டுகொள்ளாமல் உள்ளது.
இந்நிலையில், கராச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பாபு என்ற இந்திய மீனவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு எல்லை தாண்டி வந்ததாக கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர். அவரின் தண்டனைக்காலம் முடிவடைந்த பிறகும், பாபுவை விடுதலை செய்ய மறுத்து வந்தது தெரியவந்துள்ளது. அவர் எப்படி உயிரிழந்தார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் சிறையில் உயிரிழக்கும் எட்டாவது இந்திய மீனவர் இவர் ஆவார். பாகிஸ்தான் சிறைகளில் மட்டும் தண்டனைக் காலம் முடிந்தும் 180 பேர் இன்னும் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.

