அமெரிக்கா நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி பதவியேற்றார்
அமெரிக்கா நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி பதவியேற்றார்
ADDED : ஜன 02, 2026 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நியூயார்க்:: நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயரான ஜோஹ்ரான் மம்தானி: வைத்து பதவியேற்றுக் கொண்டார்.: அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு, கடந்த நவம்பரில் மேயர் தேர்தல் நடந்தது.
இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஜோஹ்ரான் மம்தானி, 34, வரலாற்று வெற்றி பெற்றார். நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த நிலையில், அவர் நள்ளிரவில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு நிகழ்ச்சி மான்ஹாட்டன் நகரின் கைவிடப்பட்ட, வரலாற்று சிறப்புமிக்க ஒரு ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதை முன் நடைபெற்றது.
நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெடிஷியா ஜேம்ஸ் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜோஹ்ரான் மம்தானி, குரான் மீது கையை வைத்து பதவியேற்றுக் கொண்டார்.

