சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற இந்திய வம்சாவளி ப்ரீத்தம் சிங்? யார் இவர் தெரியுமா?
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற இந்திய வம்சாவளி ப்ரீத்தம் சிங்? யார் இவர் தெரியுமா?
ADDED : மே 05, 2025 08:37 PM

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ப்ரீத்தம் சிங் பொறுப்பேற்று உள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தலில், மொத்தம் உள்ள 97 இடங்களில், ஆளும் பிஏபி கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, 10 தொகுதிகளில் வென்றது. தொழிலாளர் கட்சியை வழி நடத்தும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ப்ரீத்தம் சிங் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
யார் இந்த ப்ரீத்தம் சிங்?
* சிங்கப்பூரில் பிறந்த பிரிதம் சிங், பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்தவர்.
* ஆகஸ்ட் 2ம் தேதி 1976ம் ஆண்டு பிறந்த ப்ரீத்தம் சிங், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் பட்டம் பெற்றுள்ளார். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
* இவர் சிங்கப்பூரில் தொழிலாளர் கட்சியை வழிநடத்துகிறார்.
* அரசியல் களத்தில் நுழைவதற்கு முன்பு, இவர் ஒரு வழக்கறிஞராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றினார்.
* ப்ரீத்தம் சிங்கின் தலைமையின் கீழ், தொழிலாளர் கட்சி 2020ல் நடந்த பொதுத் தேர்தலில், 10 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி இருக்கையை பிடித்தது.
* இவரது தலைமையிலான தொழிலாளர் கட்சி இந்த ஆண்டு தேர்தலிலும் 10 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டது.
* இவர் 2020ம் ஆண்டு முதல் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.