ADDED : ஜூன் 13, 2025 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிகாகோ; இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் பாபி முக்கமாலா, அமெரிக்க மருத்துவ சங்கத் தலைவராக நேற்று பதவியேற்றார்.
காது, மூக்கு, தொண்டை நிபுணரான இவர், கடந்த 20 ஆண்டுகளாக மிச்சிகனின் பிலின்ட்டில் மருத்துவமனை நடத்தி வருகிறார். பாபியின் பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள். அவர்களும் மருத்துவர்கள். கடந்த 1970ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.
அமெரிக்க மருத்துவ சங்கத்தின் 180 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளி ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.