குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டும்! வங்கதேசத்தில் இந்திய விசா மையம் ஓபன்
குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டும்! வங்கதேசத்தில் இந்திய விசா மையம் ஓபன்
ADDED : செப் 03, 2024 12:45 PM

டாக்கா; வங்கதேசத்தில் முக்கிய 5 நகரங்களில் இந்திய விசா விண்ணப்ப மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
அரசு வேலைகளில் இடஒதுக்கீடு முறைக்கு எதிராக வங்கதேசத்தில் மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் பெரும் வன்முறையில் முடிந்தது. அதன் எதிரொலியாக அவாமி லீக் கட்சி தலைமையிலான அரசு கவிழ, பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். பின்னர் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு பதவியேற்றது.
இந் நிலையில், வன்முறையின் போது மூடப்பட்ட இந்திய விசா விண்ணப்ப மையங்கள் தற்போது திறக்கப்பட்டு உள்ளன. டாக்கா, சட்டோகிராம், ராஜ்சாஹி, சில்ஹெத், குல்நா ஆகிய 5 நகரங்களில் இம்மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
வங்கதேச மாணவர்கள், அவசர மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள உள்ளவர்கள், தொழிலாளர்கள் மற்றும் குறிப்பிட்ட சில தேவைகளுக்காக மட்டும் விசா பெற இந்த மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.