ADDED : ஆக 07, 2025 12:14 AM
'இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரி விதித்தது நியாயமற்றது, நியாயப்படுத்த முடியாதது' என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபரின் அறிவிப்புக்கு பதிலளித்து, நம் வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கை:
அமெரிக்க அரசின் நடவடிக்கை நியாயமற்றது; இந்தியா தனது தேச நலனைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். நியாயப்படுத்த இயலாத, காரணமற்ற நடவடிக்கை என அமெரிக்காவின் செயலை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
சந்தை விலை நிலவரத்தைப் பொருத்து, சர்வதேச வர்த்தக விதிகளின் கீழ் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை, அண்மைக் காலமாக அமெரிக்கா குறிவைத்துள்ளது.
இது தொடர்பாக, ஏற்கனவே இந்தியா பலமுறை தன் நிலையை, நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. 140 கோடி மக்களின் எரிபொருள் தேவையை நிறைவு செய்யும் நோக்கில், சந்தைப் போட்டி அடிப்படையிலான விலையில் தேச நலன் கருதியே கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.