சர்வதேச இந்திய திரைப்பட விருது அறிவிப்பு; சிறந்த நடிகராக ஷாருக்கான் தேர்வு
சர்வதேச இந்திய திரைப்பட விருது அறிவிப்பு; சிறந்த நடிகராக ஷாருக்கான் தேர்வு
ADDED : செப் 29, 2024 06:50 AM

அபுதாபி: நடப்பு 2024 (ஐ.ஐ.எப்.ஏ) சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதை, சிறந்த படத்திற்காக 'அனிமல்'வென்றது, ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்வானார்.
ஜவான் படத்தில் சிறப்பாக நடித்தற்காக, ஷாருக்கான் விருதை வென்றார். சிறந்த நடிகையாக, ராணி முகர்ஜி தேர்வானார்.
அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழா, யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்றது.
மூன்று நாள்கள் நடக்கும் இந்த விழாவானது, செப்டம்பர் 27 அன்று தென்னிந்தியத் திரைப்படத் துறைகளின் கொண்டாட்டமாக துவங்கியது.
இரண்டாம் நிகழ்வாக நேற்று, பாலிவுட் முக்கிய இடத்தைப் பிடித்தது, அதன் தொகுப்பாளர்களான சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தௌபா தௌபாவின் விக்கி கவுஷல் மற்றும் திரைப்பட இயக்குனர் கரண் ஜோஹர் ஆகியோர் இந்த விழாக்களில் கலந்து கொண்டதால் அது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.
மூன்றாம் நாள் நிகழ்வாக, இன்று (செப்.29)ஹனி சிங், ஷில்பா ராவ் மற்றும் ஷங்கர்-எஹ்சான்-லாய் போன்ற கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்துவார்கள்.
விருது பெற்றவர்கள் விபரம்:
சிறந்த படம்:(அனிமல்)
சிறந்த இயக்குனர்: விது வினோத் சோப்ரா-12 பெயில்
சிறந்த நடிகர் :ஷாருக்கான்-ஜவான்
சிறந்த நடிகை; ராணி முகர்ஜி-மிஸஸ் சட்டர்ஜி வெர்செஸ் நார்வே
சிறந்த துணை நடிகர் - அனில்கபூர்-அனிமல்
சிறந்த துணை நடிகை -ஷபனா ஆஷ்மி- ராக்கி அவுர் ரானி கி பிரேம் கஹானி
சிறந்த வில்லன்- பாபி தியோல்-அனிமல்
சிறந்த பாடகர் : புபேந்தர் பாபல் (அனிமல்)
சிறந்த பாடகி : ஷில்பா ராவ் (ஜவான்)
சிறப்பு விருது:
ஹேமா மாலினி
ஆகியோருக்கு, 2024ம் ஆண்டுக்கான,சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கப்பட்டன.