இஸ்ரேல் அணுசக்தி நிலையத்துக்கு ஈரான் குறி: 100 பேர் காயம்
இஸ்ரேல் அணுசக்தி நிலையத்துக்கு ஈரான் குறி: 100 பேர் காயம்
ADDED : மார் 22, 2026 04:49 PM

டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டில் உள்ள அணுசக்தி நியைங்கள் மீது ஈரான் தாக்குத்ல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளின் தாக்குதல் 3வது வாரத்தை தாண்டி உள்ளது. போர் முடிவுக்கு வரும் அறிகுறியே காணப்படவில்லை. இதனால், பதற்றம் அதிகரித்து வருகிறது.
ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது இஸ்ரேல் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பழிவாங்கும் வகையில், இஸ்ரேலின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசியது. டைமோனா மற்றும் அராத் பகுதிகளில உள்ள அணுசக்தி நிலையங்களை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டன. டைமோனா பகுதியில் உள்ள அணுஆராய்ச்சி மையத்தை நோக்கி ஏவுகணைகள் வந்தன.
அதில் ஒன்று அந்த பகுதியில் உள்ள கட்டடத்தில் விழுந்தது. மற்றொன்று தரையில் விழுந்தது. இந்த ஏவுகணைகளை, இஸ்ரேலில் உள்ள ஏவுகணை எதிர்ப்பு அமைப்பால் தடுக்க முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதில், அராத் பகுதியில் 84 பேரும், டைமோனா பகுதியில் 33 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

