பொது இடத்துல பாட்டு பாடியது ஒரு குத்தமா?: கைது செய்யப்பட்ட ஈரானிய பெண்
பொது இடத்துல பாட்டு பாடியது ஒரு குத்தமா?: கைது செய்யப்பட்ட ஈரானிய பெண்
ADDED : ஆக 08, 2024 01:02 PM

தெஹ்ரான்: பொது இடங்களில் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய பெண் ஈரானில் கைது செய்யப்பட்டார்.
ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம். ஹிஜாப் அணியாமல் பொது இடத்திற்கு வரும் பெண்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்படும் அளவிற்கு அங்கு சட்டம் உள்ளது. அந்த வகையில், ஜாரா எஸ்மெய்லி என்ற பெண் ஒருவர், தெஹ்ரான் தெருக்களில் அவ்வப்போது பாடல் பாடும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இவர், மெட்ரோ ரயில், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் ஹிஜாப் அணியாமல் பாட்டு பாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இஸ்லாமிய மக்கள் மீதான அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான ஒரு வகையான எதிர்ப்பாக இது பார்க்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர். ஈரானில் இதுபோன்ற நிகழ்வு புதிதல்ல. இதற்கு முன்னதாக பெண் சுதந்திரம் பற்றிய பாடல் எழுதியதற்காகவும், அந்நாட்டு அரசு மற்றும் சமூக பிரச்னைகளை விமர்சித்து பாடல் எழுதியதற்காகவும் கூட கலைஞர்களை கைது செய்துள்ளனர்.