UPDATED : செப் 23, 2024 09:00 PM
ADDED : செப் 23, 2024 05:34 PM

பெய்ரூட்: லெபனானில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வெளி தாக்குதலில் 2740க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்துவதற்கு சிறிது நேரம் முன்னதாக, இஸ்ரேலில் இருந்து அனைத்து லெபனான் போன் இணைப்புகளுக்கும் அழைப்பு வருகிறது.அதில், நீங்கள் இருக்கும் கட்டடம் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளது உடனடியாக கட்டடத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறுகின்றனர்.இன்று ஒரே நாளில் மட்டும் 80 ஆயிரம் போன் அழைப்புகள் இஸ்ரேலில் இருந்து லெபனான் தலைநகரப் பகுதிக்கு வந்ததாக, அந்நாட்டு தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இத்தாக்குதலை நிறுத்த வேண்டும் என லெபனான் பிரதமர் நஜீப் மிகாதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பிற நாடுகளை கேட்டுகொண்டுள்ளார்.
கல்வி அமைச்சர் கூறியதாவது: பாதுகாப்பற்ற இந்த சூழ்நிலையில், தெற்கு லெபனான் துணைப்பகுதிகள் மற்றும் பேக்கா பள்ளத்தாக்கில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்கள் மூடப்பட்டன.
தகவல் தொடர்பு அமைச்சர் கூறுகையில், எங்களுக்கும் தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதில் அரசு கட்டடங்களை விட்டு வெளியேறுங்கள் என்று தெரிவித்தனர். நாங்கள் எங்கள் பணிகளை தொடருகிறோம். அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டடங்களிலிருந்து வெளியேற மாட்டோம் என்றார்.