ஏழு இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை: காசா பகுதியில் பதட்டம்
ஏழு இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை: காசா பகுதியில் பதட்டம்
UPDATED : ஆக 19, 2011 09:35 AM
ADDED : ஆக 19, 2011 07:17 AM
ஜெருசலேம்: இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடந்த விமான தாக்குதலில் 6 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக நேற்று தெற்கு இஸ்ரேலில் உள்ள எகிப்து எல்லையில் துப்பாக்கியுடன் புகுந்த ஒருவன் 7 இஸ்ரேலியர்களை கொடூரமாக சுட்டுக்கொன்றான். பழி்க்குபழியாக நடந்த இந்த சம்பவம் மத்திய கிழக்கு நாடுகளின் எல்லைப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் செங்கடல் பகுதியில் இஸ்ரேல்- எகிப்து எல்லையில் உள்ள இலியாட் பகுதி . இப்பகுதி வழியாக பாலஸ்தீனியர்கள் அடிக்கடி ஊடுருவி வருவதாக புகார் எழுந்தது. இதற்கு இஸ்ரேல் , எகிப்தின் புதிய அரசின் மீது கடுமையான குற்றம் சுமத்தி வந்தது.இந்நிலையில் நேற்று பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. இதில் 6 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பழிக்குபழியாக நேற்று தெற்கு இஸ்ரேலின் எகிப்து எல்லைப்பகுதியில் பாலைப்பகுதிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம ஆசாமி, சரமாரியாக சுட்டதில் 7 இஸ்ரேலியர்கள் பலியாகினர். பாலஸ்தீனியர்களின் இந்த செயலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று டி.வி.வாயிலாக பேசுகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்தது இல்லை என்றார்.