ADDED : அக் 27, 2024 10:20 PM

பெய்ரூட்: தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் - ஹெஸ்புல்லா அமைப்பிற்கு இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. தெற்கு லெபனானில் தரை வழி நடத்துவதற்கு முன்பாகவே, கடந்த வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.
இதன்மூலம் கடந்த செப்., 23ம் தேதி வரையில் லெபனானில் பொதுமக்கள் 1,615 பேர் கொல்லப்பட்டனர்.
நேற்று தெற்கு லெபனானின் காம்பேட் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், 37 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று தெற்கு லெபனானின் பல்வேறு இடங்களில் தாக்குதலுக்கான எச்சரிக்கையை விடுத்த இஸ்ரேல், பொதுமக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியது. ஆனால், சிடானுக்குட்பட்ட எந்தப் பகுதிகளிலும் தாக்குதலுக்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், லெபனானின் சிடான் நகரில் இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 8 பேர் கொல்லப்பட்டுள்ளது. மேலும், 25க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.