பிணைக்கைதிகளை கைவிட மாட்டோம்; நம்பிக்கையுடன் சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்!
பிணைக்கைதிகளை கைவிட மாட்டோம்; நம்பிக்கையுடன் சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்!
ADDED : டிச 24, 2024 07:40 AM

ஜெருசலேம்: 'பிணைக்கைதிகளை நாங்கள் கைவிடமாட்டோம். மீட்கும் வரை நாங்கள் போரை நிறுத்த மாட்டோம்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேலுக்கு, ஹமாஸ் படையினருக்கும் இடையே, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேலில் உள்ளவர்களை பிணைக்கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்து சென்றுள்ளனர். அவர்களை மீட்டு வர இஸ்ரேல் பல்வேறு முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலில் பார்லிமென்டில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியதாவது: காசாவில் இருந்து பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் செய்கிற அனைத்து வேலைகளையும் வெளியே சொல்ல முடியாது. பிணைக்கைதிகளை மீட்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பிணைக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வரும் வரை போரை நிறுத்த மாட்டோம். பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிணைக்கைதிகளின் குடும்பத்தினருக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
நாங்களை அவர்களை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம். பிணைக்கைதிகளை நாங்கள் கைவிடமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.