ஈரான் அணுஆயுத ஆலை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்; திடுக் தகவல்
ஈரான் அணுஆயுத ஆலை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்; திடுக் தகவல்
ADDED : பிப் 13, 2025 12:43 PM

வாஷிங்டன்: ஈரானில் உள்ள அணு ஆயுத ஆலை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம் தீட்டி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. புதிதாக அதிபராக பதவியேற்ற டிரம்ப், ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டு உள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேல், ஈரானில் உள்ள அணு ஆலைகளை கண்டுபிடித்துள்ளது. இந்த ரகசிய பகுதியின் வரைபடமும் இஸ்ரேல் வசம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் மத்தியில் ஈரானில் உள்ள அணுஆயுதங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு அமெரிக்காவின் முழு ஒத்துழைப்பு அவசியம் என அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு உதவி கோரியுள்ளது. இதற்கு டிரம்ப் அரசு பச்சைக்கொடி காட்டியதாகவும் தெரிகிறது. இத்தகவல் அமெரிக்க உளவுத்துறை மேற்கோள் காட்டி அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.