sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

250 பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை வெளியிட்டது இஸ்ரேல்

/

250 பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை வெளியிட்டது இஸ்ரேல்

250 பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை வெளியிட்டது இஸ்ரேல்

250 பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை வெளியிட்டது இஸ்ரேல்


ADDED : அக் 11, 2025 11:26 PM

Google News

ADDED : அக் 11, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெருசலேம்:காசா போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, விடுவிக்கப்பட உள்ள 250 பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந் து வந்தது.

வற்புறுத்தல் இந்தப் போரால், 70,000 பாலஸ்தீனர்கள் கொல் லப்பட்டனர். இதையடுத்து, போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேலை, உலக நாடுகள் வற்புறுத்தி வந்தன.

இந்நிலையில், போர் நிறுத்தத்திற்கான 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த அமைதி திட்ட ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் சம்மதித்த போதும், ஹமாஸ் பகுதியளவே சம்மதம் தெரிவித்திருந்தது. குறிப்பிட்ட சில அம்சங்கள் குறித்து பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என ஹமாஸ் தெரிவித்தது.

இதற்கு ஒப்புக்கொண்ட இஸ்ரேல், அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தை நிறைவேற்ற, மேற்காசிய நாடான எகிப்தில், ஹமாஸ் குழுவினருடன் பேச்சு நடத்தியது.

இதையடுத்து, சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, 250 பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கான பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

இந்த 250 பேரும் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற கைதிகள் ஆவர். இஸ்ரேல் விடுவிக்கும் 250 கைதிகளுக்கு ஈடாக, காசாவில், உயிருடன் இருக்கும் 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும்.

இந்த 250 பேரை தவிர, கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலில் தொடர்பில்லாத, காசாவில் இருந்து கைது செய்யப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட, 1,700 கைதிகளையும் இஸ்ரேல் விடுவிக்க உள்ளது.

நிராகரிப்பு மொத்தமாக விடுவிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1,950 ஆகும். ஆனால், ஹமாஸ் கோரியுள்ள முக்கிய தலைவர்களான மர்வன் பர்கவுதி மற்றும் அஹ்மத் சாடத் ஆகியோரை விடுவிக்க இஸ்ரேல் மறுத்துவிட்டது.

இதே போன்று, 360 காசா பயங்கரவாதிகளின் உடல்களையும் இஸ்ரேல் திருப்பி அனுப்பும் என கூறப்படுகிறது.

ஹமாசை வழிநடத்தி இஸ்ரேலால் கொல்லப்பட்ட சகோதரர்களான யஹ்யா மற்றும் முகமது சின்வார் ஆகியோரின் உடல்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற ஹமாசின் கோரிக்கையையும் இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வீடு திரும்பும் மக்கள்!


இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் காசாவின் வடக்கு பகுதியை நோக்கி தங்கள் பயணத்தை துவக்கியுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், காசாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் திரும்பத் துவங்கியுள்ளன.
இதையடுத்து, போர் காரணமாக இடம்பெயர்ந்து, காசாவின் தெற்கு பகுதியில் குடியேறிய ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள், தற்போது மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் நம்பிக்கையில், வடக்கு காசா பகுதியை நோக்கி செல்ல துவங்கியுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதல்களால் பாலஸ்தீனியர்களின் வீடுகள் முற்றிலும் சேதமடைந்து இடிபாடுகளாக காட்சி தருகின்றன. அதனால் தங்கள் பகுதிக்கு திரும்பினாலும், தங்குவதற்கு வீடுகள் இல்லாத சூழ்நிலையை இந்த மக்கள் சந்திக்க நேரிடும். இருப்பினும், இரண்டு ஆண்டுகளாக நீடித்த பயங்கரமான போருக்கு பின் அமைதி திரும்புவதைக் கண்டு பாலஸ்தீன மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.








      Dinamalar
      Follow us