ADDED : ஆக 25, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சனா: ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் தலைநகர் சனா மீது நேற்று இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தியது.
மேற்காசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்குகிறது.
ஹவுதி படையினர் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, அந்நாட்டின் மீது 2023 முதல் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது ஹவுதி படையினர் கொத்து குண்டுகளை வீசினர். இதை இஸ்ரேல் இடைமறித்து அழித்தது.
இதற்கு பதிலடியாக, ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அதிபர் மாளிகை, கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், மின் நிலையங்கள் மீது இஸ்ரேல் விமானப் படை நேற்று தாக்குதல் நடத்தியது.