sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

காசாவை கைப்பற்ற இஸ்ரேல் அரசு ஒப்புதல்; 60,000 அவசரகால வீரர்களுக்கு அழைப்பு

/

காசாவை கைப்பற்ற இஸ்ரேல் அரசு ஒப்புதல்; 60,000 அவசரகால வீரர்களுக்கு அழைப்பு

காசாவை கைப்பற்ற இஸ்ரேல் அரசு ஒப்புதல்; 60,000 அவசரகால வீரர்களுக்கு அழைப்பு

காசாவை கைப்பற்ற இஸ்ரேல் அரசு ஒப்புதல்; 60,000 அவசரகால வீரர்களுக்கு அழைப்பு


UPDATED : ஆக 21, 2025 03:25 AM

ADDED : ஆக 21, 2025 01:02 AM

Google News

UPDATED : ஆக 21, 2025 03:25 AM ADDED : ஆக 21, 2025 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெருசலேம்:ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ராணுவ அமைச்சர் நேற்று ஒப்புதல் தெரிவித்தார். இதற்காக, 60,000 அவசரகால வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023ல் ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். 251 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை துவக்கியது.

இந்த போரில், இதுவரை 62,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். காசாவின், 75 சதவீத பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. பிணைக் கைதிகளை விடுவித்து, ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களை கைவிட்டால், போர் நிறுத்தத்திற்கு தயார் என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார்.

இந்நிலையில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல் தெரிவித்தது. இதற்கிடையே காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதற்காக ராணுவத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், அவசரகால படைப்பிரிவைச் சேர்ந்த 60,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய போர் நிறுத்தத்தின் போது, ஹமாஸ் ஒப்புக் கொண்டபடி பிணைக் கைதிகளை விடுவிக்கவில்லை. இன்னமும், 50 பிணைக்கைதிகள் காசாவில் உள்ளனர். அவர்களை விடுவிக்க அழுத்தம் தரும் வகையில், இந்த நடவடிக்கையை இஸ்ரேல் எடுத்துள்ளது.

'ஆஸ்திரேலிய பிரதமர் பலவீனமானவர்'

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், கடந்த 11ம் தேதி தன் அரசு, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தார். இது தொடர்பாக செப்டம்பரில் நடக்க உள்ள ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகக் கூடும் என தெரிவித்திருந்தார். இதனால் இஸ்ரேல் - ஆஸ்திரேலியா உறவு மோசமடைந்தது. இரு நாடுகளும் பயணியர் விசாக்களை ரத்து செய்தன. இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமரின் பாலஸ்தீன அங்கீகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் அளித்த பேட்டியில், “அல்பானீசை வரலாறு பலவீனமான பிரதமர் என நினைவுப்படுத்தும். அவர் இஸ்ரேலுக்கு துரோகம் செய்துள்ளார், ஆஸ்திரேலிய யூதர்களை கைவிட்டுள்ளார்,” என்றார். இது குறித்து அல்பானீஸ் நேற்று கூறுகையில், “நான் பிற நாட்டு தலைவர்களை மரியாதையுடன் நடத்துபவன். இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்களை நான் பொருட்படுத்தப் போவதில்லை,” என்றார்.



இஸ்ரேலியர்களை குடியமர்த்த தீவிரம்


தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில், இஸ்ரேலியர்களை குடியமர்த்தும் சர்ச்சைக்குரிய திட்டத்துக்கு இஸ்ரேலின் திட்டமிடல் மற்றும் கட்டடக் குழு அமைச்சர் ஒப்புதல் அளித்தார். ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா போன்றவை பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு பதிலடியாக இந்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஜெருசலேத்திற்கு அருகில் உள்ள மேற்கு கரை பகுதிகளில், ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் குடியமர்த்தப்பட உள்ளனர்.








      Dinamalar
      Follow us