கணிப்பை விட சரிந்த சீன பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியை எட்டுவது சந்தேகமே
கணிப்பை விட சரிந்த சீன பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியை எட்டுவது சந்தேகமே
ADDED : அக் 19, 2024 02:39 AM
பெய்ஜிங்: கடந்த ஓராண்டில் மிகக் குறைந்த அளவாக, ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில், சீனப் பொருளாதாரம் 4.58 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டதால், நடப்பு நிதியாண்டில் அதன் கணிப்பான, 5 சதவீத வளர்ச்சியை அந்நாடு எட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு சீனா. கடந்த காலாண்டில் அதன் பொருளாதார வளர்ச்சி, சென்ற ஓராண்-டில் இல்லாத சரிவாக, 4.58 சதவீதமாக பதிவாகியுள்ளதாக, அந்-நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், ஐந்து சதவீத வளர்ச்சியை சீனா எதிர்-பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அதன் இரண்டாவது காலாண்டு வளர்ச்சி 4.70 சதவீதமாக இருக்கும் என, அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர்.
மேலும், ஜி.டி.பி., வளர்ச்சியை அதிகரிக்க, பல்வேறு துறைக-ளுக்கு ஊக்கச் சலுகை திட்டங்களையும் சீன அரசு அறிவித்திருந்-தது.
எனினும், திட்டமிடப்பட்ட வளர்ச்சி இலக்கை சீனப் பொருளா-தாரம் எட்டாதது, அந்நாட்டு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி-யுள்ளது. கடும் சரிவை சந்தித்துள்ள கட்டுமானத் துறை உள்-ளிட்ட பல துறைகளுக்கு, மேலும் அதிக தொகையிலான ஊக்கச் சலுகைகளை வழங்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
கைகொடுக்காத கட்டுமான துறை
சீன கட்டுமானத் துறை கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத பெரும் வீழ்ச்சியை செப்டம்பரில் சந்தித்தது. கட்டுமானத் துறை வளர்ச்சியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்த போதி-லும், 16 மாதங்களாக பலன் அளிக்கவில்லை என, சீன அரசு உய-ரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 70 முக்கிய நகரங்களில் வீடுகள் விலை 6.10 சதவீதம் சரிந்திருப்பதாகவும்; இது 2015 மே மாதத்-துக்குப் பின், அதிகபட்ச சரிவு என்றும் அவர் கூறினார். செப்டம்-பரில் மட்டும் அரை சதவீத வீழ்ச்சியை கட்டுமானத் துறை கண்-டுள்ளது. பழைய வீடுகள் விலையும் 1.20 சதவீதம் சரிந்துள்ளது.
இந்தியா வளர்கிறது
கொரோனாவுக்குப் பின், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கச் செய்ய சீனா கடுமையாக போராட வேண்டியுள்ளது. ஆனால், உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரமான இந்தியா-வில், ஜூலை முதல் செப்டம்பர் வரையான இரண்டாவது காலாண்டு வளர்ச்சி 6.70 சதவீதம். நடப்பு நிதியாண்டில் இந்தி-யாவின் வளர்ச்சி 7.20 ஆக இருக்கும் என்று முன்னணி சர்வதேச வங்கிகள், நிதி அமைப்புகள் கணித்துள்ளன.

