UPDATED : ஜன 03, 2024 07:20 AM
ADDED : ஜன 03, 2024 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது.
கிழக்காசிய நாடான ஜப்பானில், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், அந்நாட்டின் ஹோன்சு தீவின் மேற்கு கடலோர பகுதியில் நேற்று முன்தினம், 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு கடலோரத்தில் உள்ள நோடோ, இஷிகவா மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து, 90 நிமிடங்களில், 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டன.
இந்நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 62 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையை வானிலை மையம், நேற்று திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.