கடத்தி வரப்பட்ட கொரில்லா குட்டி துருக்கி விமான நிலையத்தில் மீட்பு
கடத்தி வரப்பட்ட கொரில்லா குட்டி துருக்கி விமான நிலையத்தில் மீட்பு
ADDED : டிச 24, 2024 08:02 PM

இஸ்தான்புல்: தாய்லாந்திற்கு கடத்தி செல்வதற்காக மரப்பெட்டியில் டி-சர்ட் அணிந்த கொரில்லா குட்டி மீட்கப்பட்ட சம்பவம் துருக்கி விமான நிலையத்தில் நடந்துள்ளது.
நைஜிரியாவிலிருந்து கப்பல் வழியாக வந்த சரக்கு பெட்டகம் ஒன்று துருக்கி இஸ்தான்புல் விமான நிலையம் வந்தது. அதனை சுங்க அமலாக்கத்துறை மற்றும் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது மரப்பெட்டியை உடைத்து பார்த்த போது அரிய வகை கொரில்லா குரங்கு குட்டி டி-சர்ட் அணிந்த நிலையில் இருந்தது.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நைஜீரியாவில் அழிந்து வரும் இந்த விலங்கு துருக்கி வழியாக தாய்லாந்தின் பாங்காங்க் நகருக்கு கடத்தி செல்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தெரியவந்தது. தற்போது கொரில்லா குட்டியை வேளாண்மை மற்றும் வனத்துறையின் கண்காணிப்பில் வைத்து பராமரித்து வருகின்றனர். அதற்கு பாலூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், பாவம் தாயை விட்டு பிரிந்துள்ளதே என மிகவும் வருத்தத்துடன் வீடியோவை பகிர்ந்துள்ளனர். இந்த விலங்கை கடத்தியவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.