ADDED : மே 23, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவின் குய்சோ மாகாணத்தின் சாங்ஷி மற்றும் குவோவா நகரங்களில் நேற்று அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன; ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில், 10 பேர் பலியாகினர்.
இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் புதைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மீட்புப் பணி முழு வீச்சில் நடக்கிறது. மோப்ப நாய்கள் உதவியுடன், நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி நடக்கிறது.
செங்குத்தான மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்பு என்பதால், குவோவாவில் மீட்புப் பணிகள் சிக்கலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.