மிகச்சிறிய சிங்கள குடும்பங்கள்: வருத்தப்படுகிறார் இலங்கை பிரதமர்
மிகச்சிறிய சிங்கள குடும்பங்கள்: வருத்தப்படுகிறார் இலங்கை பிரதமர்
ADDED : ஜூலை 21, 2011 05:55 PM
கண்டி: இலங்கையில் சிங்கள குடும்பங்கள் தற்போது மிகவும் சிறுத்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் விரைவில் சிங்கள இனமே அழிந்து விடும் என கவலைப்பட்டிருக்கிறார் இலங்கை பிரதமர் ஜெயரத்னே.
இலங்கையில் தென்பகுதியில் அமைந்துள்ள ஆன்மிக சிறப்புமிக்க கண்டியில் நடந்த விழா ஒன்றில் சிங்களவர்கள் மத்தியில் பேசிய ஜெயரத்னே, “இலங்கையில் சிங்கள குடும்பங்கள் மிகவும் கொஞ்சம் கொஞ்மாக சிறுத்து வருகிறது. இதே இலங்கையில் உள்ள தமிழ் அல்லது முஸ்லிம் குடும்பத்தில் 7 முதல் 8 குழந்தைகள் இருப்பதை நீங்கள் எங்கும் காணலாம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் “சர்வதேச குடும்பநல ஆய்வறிக்கை ஒன்றில், 1960களில் இருந்து இலங்கையில் குழந்தை பிறப்பு சதவீதம் குறைந்து விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்த அவர், “1960களில் ஒரு பெண் 5 குழந்தைகளை பெற்றார். இதுவே 1990களில் 3 ஆக குறைந்து விட்டது” என்றும் கூறினார். இலங்கையில் உள்ள மக்களில் 70 சதவீதம் பேர் சிங்களர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.