sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவில் முதன்முறையாக நியூயார்க்கில் தீபாவளிக்கு விட்டாச்சு லீவு !

/

அமெரிக்காவில் முதன்முறையாக நியூயார்க்கில் தீபாவளிக்கு விட்டாச்சு லீவு !

அமெரிக்காவில் முதன்முறையாக நியூயார்க்கில் தீபாவளிக்கு விட்டாச்சு லீவு !

அமெரிக்காவில் முதன்முறையாக நியூயார்க்கில் தீபாவளிக்கு விட்டாச்சு லீவு !

5


UPDATED : அக் 26, 2024 10:54 PM

ADDED : அக் 26, 2024 10:12 PM

Google News

UPDATED : அக் 26, 2024 10:54 PM ADDED : அக் 26, 2024 10:12 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: தீபாவளியை அதிகாரப்பூர்வ பள்ளி விடுமுறையாக அறிவித்து நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து தீபாவளிக்கு விடுமுறை அறிவித்த அமெரிக்காவின் ஒரே நகரம் நியூயார்க் என்று வரலாற்று பெருமையை பெற்றுள்ளது.

நியூயார்க் நகரில் கடந்த 25,ம் தேதி நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தனது அதிகாரப்பூர்வ இல்லமான கிரேசி மேன்ஷனில் தீபாவளி இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்தார், நியூயார்க் தமிழ்ச் சங்கம், அதன் நிர்வாகக் குழு மற்றும் பல்வேறு முக்கிய இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

'தீபாவளி என்பது மகிழ்ச்சி, பிரதிபலிப்பு மற்றும் ஒற்றுமைக்கான நேரம், அதை இங்கே கிரேசி மேன்ஷனில் இந்திய சமூகத்தின் தலைவர்களுடன் கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறேன்' என்ற மேயர் ' தீபாவளி அன்ற பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

தீபாவளியை பள்ளி விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த நாட்டின் முதல் நகரம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றுள்ளது. எங்கள் பெரிய நகரத்தில் அனைத்து சமூகங்களும் பார்க்கப்படுவதையும், மதிக்கப்படுவதையும், கொண்டாடப்படுவதையும் உறுதி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. என்றார்.

Image 1337382



மேயரின் அறிவிப்பை வரவேற்ற நியூயார்க் தமிழ்ச் சங்கத் தலைவர் கதிர்வேல் குமாரராஜா, கூறுகையில் : மேயரின்நடவடிககை மற்றும் தீபாவளியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் நகரின் முற்போக்கு நிலைப்பாட்டிற்கும் நன்றி. 'பல தமிழ் குடும்பங்களுக்கு, தீபாவளி என்பது ஆண்டின் முக்கியமான நேரம்.

இது சமூக ஒற்றுமை மற்றும் சந்திப்புகளின் பகிர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது. நியூயார்க் நகரில் பள்ளி விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவது, கலாச்சார பன்முகத்தன்மைக்கு ஒரு சான்றாகும். என்றார்.






      Dinamalar
      Follow us