ADDED : ஆக 28, 2025 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவுடன் மீண்டும் இணைவோம்!
இந்தியா - அமெரிக்கா உடனான உறவு தற்போது மிகவும் சிக்கலாக உள்ளது. வர்த்தகம் தொடர்பான பேச்சுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.
கடந்த ஜூன் மாதமே, முதல் நாடாக இந்தியாவுடன் உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்த்திருந்தோம். பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான நட்பு மிகவும் சிறப்பானது.
இந்தியா உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாக உள்ளது. அமெரிக்கா மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ளது.
அதனால், இரு நாடுகளும் மீண்டும் இணைவது தான் அனைத்து தரப்புக்கும் சரியானதாக இருக்கும்.
- ஸ்காட் பெசன்ட், அமெரிக்க நிதி அமைச்சர்