ADDED : ஜூலை 29, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாங்காக்; தாய்லாந்தில் பிரபல வணிக வளாகத்தில், ஐந்து பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர், தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின், பிரபல சுற்றுலா தலமான தலைநகர் பாங்காக்கில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வணிக வளாகத்துக்குள், நேற்று நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.
இதில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். பின்னர் அந்த நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எதற்காக அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது உடனடியாக தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.