sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மூவர்ணக்கொடியை ஏந்திய மனுபாகர், ஸ்ரீஜேஷ்! வண்ணமயமான விழாவுடன் நிறைவு பெற்றது பாரிஸ் ஒலிம்பிக்

/

மூவர்ணக்கொடியை ஏந்திய மனுபாகர், ஸ்ரீஜேஷ்! வண்ணமயமான விழாவுடன் நிறைவு பெற்றது பாரிஸ் ஒலிம்பிக்

மூவர்ணக்கொடியை ஏந்திய மனுபாகர், ஸ்ரீஜேஷ்! வண்ணமயமான விழாவுடன் நிறைவு பெற்றது பாரிஸ் ஒலிம்பிக்

மூவர்ணக்கொடியை ஏந்திய மனுபாகர், ஸ்ரீஜேஷ்! வண்ணமயமான விழாவுடன் நிறைவு பெற்றது பாரிஸ் ஒலிம்பிக்

2


UPDATED : ஆக 12, 2024 04:59 AM

ADDED : ஆக 12, 2024 01:18 AM

Google News

UPDATED : ஆக 12, 2024 04:59 AM ADDED : ஆக 12, 2024 01:18 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: 17 நாள் உலகை கட்டிப் போட்ட பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா, வண்ணயமான விழாவுடன் நிறைவுபெற்றது. ஹாலிவுட் நடிகர் டாம் குரூசின் சாகச சண்டை காட்சிகள், ஸ்னுாப் டாக், பில்லி எலிஷ் உள்ளிட்ட உலகின் முன்னணி பாடகர்களின் இசை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா களை கட்டியது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ல் துவங்கியது. 206 நாடுகளை சேர்ந்த 10,714 பேர் பங்கேற்றனர். ஈட்டி எறிதலில் ஒரு வெள்ளி, துப்பாக்கி சுடுதலில் 3 வெண்கலம் மற்றும் மல்யுத்தம், ஹாக்கியில் தலா ஒரு வெண்கலம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 71வது இடம் பிடித்தது. இதன்மூலம் ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் 3வது முறையாக 71வது இடம் பெற்றது. இதற்கு முன் அட்லாண்டா (1996), சிட்னி (2000) ஒலிம்பிக்கில் தலா ஒரு வெண்கலம் மட்டும் வென்றிருந்த இந்தியா, பதக்கப்பட்டியலில் 71வது இடம் பிடித்தது.

Image 1306580

இசை வெள்ளம்


கடந்த ஜூலை 26ல் பாரிசின் சென் நதியில் படகு அணிவகுப்புடன் வித்தியாசமாக துவக்க விழா நடந்தது. இதே போல நிறைவு விழாவும் புதுமையாக நடத்தப்பட்டது. பாரிசின் ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் விழா நடந்தது. இதில் 80,000 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசித்தனர். 'மிஷன்: இம்பாசிபிள்' புகழ் ஹாலிவுட் பட ஆக் ஷன் 'ஹீரோ' டாம் குரூஸ் மிரட்டினார். இவரது ஸ்கைடைவிங், பைக் 'ஸ்டன்ட்' காட்சிகள் ரசிகர்களை பரவசமடையச் செய்தது. அமெரிக்காவின் ராப் பாடகர் ஸ்னுாப் டாக், பாடகி பில்லி எய்லிஷ், பேண்ட் வாத்திய குழுவான ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் உட்பட உலகின் முன்னணி இசை கலைஞர்கள் அசத்தினர்.

Image 1306582

மனு, ஸ்ரீஜேஷ் கவுரவம்


அனைத்து நாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. இந்தியா சார்பில் 2 பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீராங்கனை மனுபாகர், ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் சேர்ந்து மூவர்ணக்கொடியை ஏந்தி வந்தனர். அடுத்த ஒலிம்பிக் போட்டி லாஸ் ஏஞ்ல்சில் 2028ல் நடக்க உள்ளது. பாராம்பரிய முறைப்படி பாரிஸ் மேயர் ஆன் ஹிடால்கோ, ஒலிம்பிக் கொடியை சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் தாமஸ் பாக்கிடம் அளித்தார். இதை, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாசிடம் வழங்கினார்.

Image 1306583

நிறைவு விழாவில் ஒலிம்பிக் கொடியை பெறும் முதல் கறுப்பின பெண் மேயர் என்ற பெருமையை கரேன் பாஸ் பெற்றார். 'கிராமி' விருது வென்ற பாடகி கேப்ரியலா சர்மியன்டோ வில்சன்(எச்.இ.ஆர்.,) அமெரிக்க தேசிய கீதத்தை பாடினார். 2028 ஒலிம்பிக் போட்டிக்கான முன்னோட்ட நிகழ்ச்சிக்கு பின், பாரிஸ் ஒலிம்பிக் ஜோதி அணைக்கப்பட்டு, விழா முடிவடைந்தது.






      Dinamalar
      Follow us