ஜப்பானில் சுற்றுலா தலம் அருகே வணிக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து
ஜப்பானில் சுற்றுலா தலம் அருகே வணிக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து
ADDED : ஜன 21, 2025 05:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டோக்கியோ: ஜப்பானின் ஒசாகாவில் உள்ள சுற்றுலா தலம் அருகே மிகப்பெரிய வணிக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் ஒசாகா நகரில் டவுன்டன் ஷாப்பிங் சாலையில் ஐந்து அடுக்குமாடி வணிக கட்டடம் உள்ளது. சுற்றுலா தலம் அருகே அமைந்துள்ளதால் இங்கு எப்போதும் கூட்டம் இருக்கும்.
இந்த வணிக கட்டடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து கரும் புகை வெளியேறி வருகிறது.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்தனர். அங்கு 26 அவசர உதவி வாகனங்கள் அங்கு முகாமிட்டுள்ளன. பாதிப்பு குறித்து தகவல் இதுவரை வெளிவரவில்லை.