ADDED : ஆக 06, 2025 01:53 AM
கீவ்:சீனா, பாகிஸ்தானைச் சேர்ந்த கூலிப் படைகள், ரஷ்யாவுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. இந்தப் போரை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் தோல்வி அடைந்தன.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, நேற்று வோவ்சான்ஸ்க் நகரில் ராணுவ வீரர்களை சந்தித்துப் பேசினார்.
இது குறித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ஜெலன்ஸ்கி கூறியதாவது:
ட்ரோன் வினி யோகம், ஆட்சேர்ப்பு மற்றும் படைப்பிரிவுகளுக்கான நேரடி நிதியுதவி தொடர்பான பிரச்னைகள் குறித்து ராணுவ தளபதிகளுடன் கலந்துரையாடினேன்.
சீனா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதை நம் ராணுவம் கண்டறிந்துள்ளது. அவர்கள் ரஷ்யாவுக்காக போராடும் கூலிப்படையினர். எங்கள் நாடு இதற்கு பதிலளிக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.