ADDED : நவ 08, 2025 12:20 AM

மாஸ்கோ: ரஷ்யாவில் மாயமான இந்திய மருத்துவ மாணவர், ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள கபன்வாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் சிங் சவுத்ரி, 22. இவர், ரஷ்யாவின் உபா நகரில் உள்ள பாஷ்கிர் மருத்துவ பல்கலையில் மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படித்து வந்தார்.
உபாவில் உள்ள விடுதியில் தங்கி படித்த அஜித், கடந்த மாதம் 19ம் தேதி பால் வாங்கப் போவதாகக் கூறி விட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
விடுதியிலிருந்து சில கி.மீ., தொலைவில் உள்ள வெள்ளை ஆற்றங்கரையில் அஜித்தின் உடைகள், மொபைல் போன், கால ணிகள் கண்டெடுக்கப் பட்டன.
கடந்த 19 நாட்களாக அஜித்தை தேடி வந்த நிலையில், ஆற்றுடன் இணைக்கப்பட்ட அணையில், அவரது உடல் மீட்கப்பட்டது. அஜித்தின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

