அதிர்ந்தது நியூயார்க் சிட்டி: மோடிக்கு கிடைத்தது அமோக வரவேற்பு: வீடியோ வைரல்
அதிர்ந்தது நியூயார்க் சிட்டி: மோடிக்கு கிடைத்தது அமோக வரவேற்பு: வீடியோ வைரல்
ADDED : செப் 24, 2024 01:16 PM

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடி, இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மோடி வருகை தந்ததில் இருந்து அவர் உரையாற்றும்போதும் அனைவரும் 'மோடி.. மோடி..' என முழக்கம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் 'குவாட்' அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடைபெற்றது. இதற்காக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் அரசு மரியாதை அளிக்கப்பட்டதுடன், இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்று முன்தினம் (செப்.,22) நியூயார்க்கில் நடந்த 'மோடியும் அமெரிக்காவும்' நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவின் 40 மாகாணங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட இந்திய புலம்பெயர்ந்தோர் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடியின் உரையை கேட்ட ஆயிரக்கணக்கான மக்கள், 'மோடி.... மோடி....' என்ற முழக்கங்களை தொடர்ந்து எழுப்பினர். இதனால் அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது. இது சம்பந்தமான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

