டிச., 28ல் பார்லிமென்ட் தேர்தல் ராணுவ ஆட்சி அறிவிப்பு மியான்மர்
டிச., 28ல் பார்லிமென்ட் தேர்தல் ராணுவ ஆட்சி அறிவிப்பு மியான்மர்
ADDED : ஆக 19, 2025 07:27 AM
நேபிடா: உள்நாட்டு கலவரங்கள், மோதல்கள் நீடி த்து வரும் நிலையில், பார்லிமென்டுக்கு, டிச., 28ல் தேர்தல் துவங்க உள்ளதாக மியான்மர் ராணுவ ஆட்சி அறிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த 2020ல், ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தேர்தலில் மோசடி நடைபெற்றதாகக் கூறி ஆட்சியைக் கவிழ்த்து, 2021ல் நிர்வாகத்தை ராணுவம் எடுத்துக் கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைத் தவிர, ராணுவத்துக்கு எதிராக ஆயுதங்களை ஏந்திய கிளர்ச்சி படைகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடத்துவதாக ராணுவ ஆட்சி கூறியிருந்தது. அதன்படி டிச., 28ல் தேர்தல் துவங்கும் என்றும், விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும், அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. மியான்மரின் பெரும்பான்மையான பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. அதனால், அங்கு எப்படி தேர்தல் நடத்தப்படும் என்பதில் குழப்பம் உள்ளது.