மீண்டும் குலுங்கியது மியான்மர்; ரிக்டரில் 4.2ஆக பதிவு
மீண்டும் குலுங்கியது மியான்மர்; ரிக்டரில் 4.2ஆக பதிவு
ADDED : மார் 29, 2025 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாங்காக்: மியான்மரில் நள்ளிரவில் மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில், 4.2 ஆக இந்நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
மியான்மர் நாட்டில் நேற்று, இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகின. இது, தாய்லாந்திலும் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. பாங்காக் நகரில் சில வானுயர்ந்த கட்டடங்கள் சரிந்து விழுந்தன. 144 பேர் உயிரிழந்தனர்; 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நள்ளிரவில் மீண்டும் மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 11.56 மணிக்கு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில், 4.2 என்ற அளவில், மிதமாக இந்நிலநடுக்கம் ஏற்பட்டதால், பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.