ADDED : ஆக 07, 2025 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வார்ஸா: போலந்தின் புதிய அதிபராக கரோல் நவ்ரோக்கி, 42, நேற்று பதவியேற்றார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளரான இவர், எந்த அரசியல் பின்புலம் இல்லாதவர்.
ஐரோப்பிய நாடான போலந்தில், கடந்த ஜூன் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், கன்சர்வேட்டிவ் கட்சியி ன் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கரோல் நாவ்ரோக்கி, அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவுடன் குறுகிய ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 2015ல் கன்சர்வேட்டிவ் கட்சியில் சேரும் வரை, அவர் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராகவும் இருந்தது இல்லை.
இந்நிலையில், நவ்ரோக்கி நேற்று அதிபராக பதவியேற்றார்.