நேபாளம் 1000 ரூபாய் நோட்டுகள் 43 கோடி அச்சிட முடிவு
நேபாளம் 1000 ரூபாய் நோட்டுகள் 43 கோடி அச்சிட முடிவு
ADDED : நவ 09, 2025 12:57 AM
காத்மாண்டு:: நேபாளத்தின் 1000 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை சீன நிறுவனம் பெற்றுள்ளதாக அந்நாட்டு மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தின் மத்திய வங்கி, 'நேபாள் ராஷ்ட்ர பேங்க்' அந்நாட்டின் 1,000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை வடிவமைத்தல், அச்சிடுதல், வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கான மொத்த செலவாக, 149 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக நடத்தப்பட்ட டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களில், சீன நிறுவனம் வெற்றி பெற்றிருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 43 கோடி எண்ணிக்கையிலான 1000 ரூபாய் நோட்டுகளை இந்நிறுவனம் நேபாளத்துக்காக அச்சிட்டு கொடுக்க உள்ளது. இதற்கு முன், 5, 10, 100 மற்றும் 500 ரூபாய் உள்ளிட்ட பல மதிப்புடைய நோட்டுகளை நேபாள வங்கிக்கு, சீன நிறுவனம் அச்சிட்டு வழங்கியுள்ளது.

