ADDED : நவ 09, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: பொருளாதார ஒத்துழைப்புக்கான, 'ஜி - 20' அமைப்பின் உச்சி மாநாடு, வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கப் போவதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.
வெள்ளை இன மக்களுக்கு எதிராக படுகொலை நடப்பதால், மாநாட்டை புறக்கணிப்பதாக நேற்று அவர் அறிவித்து உள்ளர்.

