தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ நேபாள பெருவெள்ளம் மேலும் 6 உடல்கள் மீட்பு

நேபாள பெருவெள்ளம் மேலும் 6 உடல்கள் மீட்பு

நேபாள பெருவெள்ளம் மேலும் 6 உடல்கள் மீட்பு


ADDED : செப் 18, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 07:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காத்மாண்டு: நேபாளத்தில், பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நீர்மின் சுரங்கத்தில் இருந்து, மேலும் ஆறு உடல்கள் மீட்கப்பட்டன.

நம் அண்டை நாடான நேபாளம் மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லையில், இமயமலை தொடரில் உள்ள லாங்டாங் லிருங் சிகரத்தில் இருந்த பனிப்பாறையின் ஒரு பகுதி, ஆக., 26ல் திடீரென சரிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், பல கிராமங்கள், பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 1,410-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 6,145 பேர் மாயமாகியுள்ளனர்.

குறிப்பாக, அப்பகுதியில் இருந்த நீர்மின் திட்டங்களின் சுரங்கங்களுக்குள் தண்ணீர் மற்றும் சேறு புகுந்ததால், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர். சமீபத்தில் இந்திய மற்றும் நேபாளக் குழுவினர் இணைந்து, சிலிமே நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் இருந்து ஐந்து உடல்களை மீட்டனர். அதற்கு முன், ‘திரிசூலி 3ஏ’ நீர்மின் திட்டத்தின் சுரங்கத்திற்குள், 558 அடி துாரத்தில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்களை உயிருடன் மீட்டனர்.

இந்நிலையில், ‘திரிசூலி- 1’ நீர்மின் திட்டத்தின் சுரங்கப் பகுதியில், கான்கிரீட் வேலைக்காக தயார் செய்திருந்த இரும்பு வலைக்குள் சிக்கியிருந்த ஆறு உடல்களை நேபாள மீட்புப் படையினர் நேற்று மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us