உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஜூன் 07, 2026 11:40 PM
ADDED : ஜூன் 07, 2026 11:31 PM

அ நிறம் | அளவு
பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தெற்கு வஜிரிஸ்தானின் குல் கச் என்ற பகுதியில், பழங்குடியினத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்தது. சமீப காலமாக இந்த பகை தீவிரமடைந்தது. இந்நிலையில், இரு தரப்பினரிடையே நேற்று பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; 2 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் காயம்
ஓஹாயோ: அமெரிக்காவின் ஓஹாயோ மாகாணத்தின் டொலிடோ நகரில், ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற, 'ஓல்ட் வெஸ்ட் எண்டு' திருவிழாவின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில், 12 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
