தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ சீனாவில் கனமழை வெள்ளத்தால் ஊருக்குள் புகுந்த நச்சு பாம்புகள்

சீனாவில் கனமழை வெள்ளத்தால் ஊருக்குள் புகுந்த நச்சு பாம்புகள்

சீனாவில் கனமழை வெள்ளத்தால் ஊருக்குள் புகுந்த நச்சு பாம்புகள்


UPDATED : ஜூலை 09, 2026 10:47 PM

ADDED : ஜூலை 09, 2026 10:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 10:47 PM ADDED : ஜூலை 09, 2026 10:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீஜிங்:நம் அண்டை நாடான சீனாவின் தென்பகுதியில் உள்ள குவாங்சியில் 'மேசக்' சூறாவளி மற்றும் கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள பாம்பு பண்ணையையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், அங்கிருந்த 900க்கும் மேற்பட்ட பாம்புகள் தப்பி, வெள்ள நீரில் வாயிலாக ஊருக்குள் புகுந்தன.

தப்பிய பாம்புகளில் பெரும்பாலானவை கொடிய விஷத்தன்மை உடைய 'சீன கோப்ரா' இனத்தை சேர்ந்தவை என கூறப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் புகுந்துள்ளதால், அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில், வெள்ள நீரில் நடந்து சென்ற ஒருவரை விஷப்பாம்பு ஒன்று கடித்ததில் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாம்புகளை பிடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜெர்மனியில் வெப்ப அலை:5,000 பேர் உயிரிழப்பு

பெர்லின்:ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் முதன்மை பொது சுகாதார நிறுவனமான ஆர்.கே.ஐ., எனும் 'ராபர் கோச் இன்ஸ்டிட்யூட்' தெரிவித்துள்ளது. வெப்ப அலையால், முதியோர், நாள்பட்ட உடல்நல குறைபாடுகள் உள்ளவர்கள், போதிய காற்று வசதி இல்லாத வீடுகளில் வசிப்பவர்களே அதிகம் உயிரிழந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 4,270 பேர் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாவர்.

கடந்த 10 ஆண்டுகளில். ஜெர்மனியில் 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் அதிகளவு வெப்பம் பதிவானது. இந்த ஆண்டுகளில் முறையே 8,400 மற்றும் 6,900 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே ஜெர்மனி உட்பட ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான கோடை வெப்பத்தை எதிர்கொண்டு வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us