தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ ரஷ்ய எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்

ரஷ்ய எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்

ரஷ்ய எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்


UPDATED : ஜூலை 09, 2026 10:15 PM

ADDED : ஜூலை 09, 2026 10:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 10:15 PM ADDED : ஜூலை 09, 2026 10:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீவ்:ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கப்பல்களை குறிவைத்து உக்ரைன் நேற்று தாக்குதல் நடத்தியது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து, ட்ரோன் எனும் ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று அதிகாலை மேற்கு ரஷ்யாவின் ட்வெர் நகரில் உள்ள ஒரு எண்ணெய் கிடங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் அம்மையம் தீக்கிரையானது.

இதேபோல் தெற்கு ஸ்டாவ்ரோபோல் பிராந்தியத்தில், வியாஸ்னிகியில் நடத்தப்பட்ட தாக்குதலில், அங்கு இருந்த எண்ணெய் கிடங்கு தீப் பற்றி எரிந்தது. அசோவ் கடற்பகுதியில், நங்கூரமிட்டு நின்றிருந்த இரு ரஷ்ய எண்ணெய் கப்பல்களுக்கும் உக்ரைன் குறிவைத்தது. இதில், இரு கப்பல்களும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்புகள் மீது உக்ரைன் தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதால், ரஷ்யாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், எரிபொருள் நிரப்ப, வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us