லண்டன் நோக்கி சென்ற ரயிலில் கத்திக்குத்து :9 பேர் கவலைக்கிடம்; இருவர் கைது
லண்டன் நோக்கி சென்ற ரயிலில் கத்திக்குத்து :9 பேர் கவலைக்கிடம்; இருவர் கைது
ADDED : நவ 02, 2025 11:48 PM

லண்டன்:  லண் டன் நோக்கி சென்ற ரயிலில் நடந்த கொடூரமான கத்திக் குத்து சம்பவத்தில் ஒன்பது பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; சந்தேகத்துக்கிடமான இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
விசாரணை ஐரோப்பிய நாடான பிரிட்டனின் கேம்பிரிட்ஜ்ஷைரில் உள்ள ஹண்டிங்டன் ரயில் நிலையம் அருகே, டான்காஸ்டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் நோக்கி சென்ற ரயிலில் நேற்று முன்தி னம் கத்திக்குத்து சம்பவம் நடந்தது.
இதில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஒன்பது பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பிரிட்டன் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் இருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கவில்லை.
இச்சம்பவத்துக்கான கார ணம் மற்றும் நோக்கம் குறித்து இதுவரை தெளிவாக தெரியவில்லை என்றும், இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர், இத் தாக்குதல் பயங்கரமானது என்றும், ஆழ்ந்த கவலைக்குரியது என்றும் தெரிவித்தார்.
அச்சம் கடந்த 2011 முதல் கத்திக் குத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனில் கடுமையான துப்பாக்கி சட்டங்கள் இருந்த போதிலும், சமீப காலமாக கத்திக்குத்து சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தையும், கவலையையு ம் அதிகரித்துள்ளது.
கத்திக்குத்து குற்றங்களை குறைக்கும் முயற்சியின்  ஒருபகுதியாக இந்தாண்டு, 60,000 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இச்சம்பவம் நடந்து அரசையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

