தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஈரானுடன் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை: அமெரிக்கா தகவல்

ஈரானுடன் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை: அமெரிக்கா தகவல்

ஈரானுடன் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை: அமெரிக்கா தகவல்

1


ADDED : நவ 09, 2026 09:08 AM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : நவ 09, 2026 09:08 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக கத்தார், ஓமன் நாடுகளின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது தொடர்பாக, நிருபர்களிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது:

ஈரானுடனான தற்போதைய மோதலைத் தீர்ப்பதற்கான ராஜதந்திர முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. பேச்சுவார்த்தைகளில் எந்த திருப்பு முனையும் ஏற்படவில்லை.

பல நாடுகள் பல்வேறு யோசனைகள் உடன் அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாம் ஒரு திருப்புமுனையின் விளிம்பில் இருக்கிறோம் என்று நான் கூற மாட்டேன்.

சர்வதேசப் பிரச்னைகளை ராஜதந்திரத்தின் மூலம் தீர்ப்பதையே அதிபர் டிரம்ப் விரும்பினாலும், சாத்தியமற்ற நிபந்தனைகளின் கீழ் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்க முடியாது.

ஈரானின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மட்டுமல்ல, சில சமயங்களில் அவை மூர்க்கத்தனமானவை, அபத்தமானவை, உண்மையிலேயே யதார்த்தமற்றவை. இவ்வாறு மார்கோ ரூபியோ கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us