sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஒபாமாவின் வரி உயர்வு கோரிக்கை முறியடிப்பு

/

ஒபாமாவின் வரி உயர்வு கோரிக்கை முறியடிப்பு

ஒபாமாவின் வரி உயர்வு கோரிக்கை முறியடிப்பு

ஒபாமாவின் வரி உயர்வு கோரிக்கை முறியடிப்பு


UPDATED : ஆக 02, 2011 09:14 AM

ADDED : ஆக 01, 2011 11:55 PM

Google News

UPDATED : ஆக 02, 2011 09:14 AM ADDED : ஆக 01, 2011 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்கக் கடன் நெருக்கடிக்கு கடைசி நேரத்தில் தீர்வு காண வேண்டிய சூழலில், தனது பல்வேறு கோரிக்கைகளை விட்டுக் கொடுத்து எதிர்க்கட்சியினரின் நிர்ப்பந்தத்துக்கு அதிபர் பராக் ஒபாமா பணிந்து விட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'இது நான் விரும்பிய ஒப்பந்தம் அல்ல' என தனது ஆதங்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். இதை உறுதிப்படுத்தும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் பாய்னர்'வரி உயர்வு வேண்டும் என, வெள் ளை மாளிகையின் கோரிக் கை முறியடிக்கப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.



முரண்பாடுகள்: அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை அதிகரிப்பது தொடர்பாக, கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக, அந்நாட்டு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையில் பல முறை பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. ஆண்டுச் செலவைக் குறைப்பது, கடன் உச்சவரம்பை அதிகரிப்பது ஆகிய இரு விஷயங்களில் அவை ஒத்துப் போனாலும், எந்தெந்தச் செலவுகள் குறைக்கப்பட வேண்டியவை, கடன் உச்சவரம்பு எந்த விதத்தில் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து முரண்பாடுகள் எழுந்தன.



இருகட்சிகளின் உள்நோக்கம்: இதற்கிடையில், இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் இரு கட்சிகளும் பல பரிந்துரைகள் அடங்கிய சில மசோதாக்களைத் தயார் செய்து, பிரதிநிதிகள் மற்றும் செனட் சபையில் தாக்கல் செய்தன. அதிபர் ஒபாமா, கடந்தாண்டு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை எப்படியாவது சீர்குலைத்திட வேண்டும், குறிப்பாக வரி அதிகரிப்பின் மூலம் அதைச் சாதித்திட வேண்டும் என்பது எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.அதை நிரூபிக்கும் வகையில் அக்கட்சி தயாரித்திருந்த மசோதாக்களில் சில பரிந்துரைகள் சேர்க்கப்பட்டிருந்தன. அதேபோல், அடுத்தாண்டு தேர்தலை எவ்விதச் சிக்கலும் இல்லாமல் ஒபாமா சந்திக்க வேண்டும் என்ற நோக்கில், ஆளும் ஜனநாயகக் கட்சியின் மசோதாக்களின் பரிந்துரைகள் இருந்தன.



அதிபர் வலியுறுத்தல்: பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியும், செனட் சபையில் ஜனநாயகக் கட்சியும் பெரும்பான்மை பலத்துடன் இருந்ததால், பரஸ்பரம் ஒருவர் கொண்டு வந்த மசோதாவை மற்றொருவர் நிராகரித்துக் கொண்டே வந்தனர்.இதற்கிடையில் அதிபர் ஒபாமா அளித்த பேட்டியில்,'இப்பிரச்னைக்கு காணப்படும் தீர்வு இரு கட்சிகளும் இணைந்து கண்டதாக இருக்க வேண்டும்' என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தினார்.



உடன்பாடு எட்டப்பட்டது:இந்நிலையில், கடந்த ஜூலை 30ம் தேதி இரவில், இரு கட்சிகளும் ஒருமித்த கருத்தை எட்டி விட்டதாக செய்திகள் வெளியாயின. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.நேற்று முன்தினம், செனட் சபையில், செனட் பெரும்பான்மை (ஆளும் கட்சி) தலைவர் ஹாரி ரெய்டு தனது மசோதாவை தாக்கல் செய்தார். 49 பேர் ஆதரித்தும் 50 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். இதனால் அம்மசோதா தோற்றது.இதையடுத்து, இருகட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்தது. நேற்று முன்தினம் இரவு இரு கட்சிகளுக்கிடையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது.

ஒபாமா அறிவிப்பு: கடன் நெருக்கடிக்கு தீர்வு எட்டப்பட்டதை அதிபர் ஒபாமா செய்தியாளர்களிடம் அறிவித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் கடன் நெருக்கடிக்கு இரு கட்சிகளும் இணைந்து ஒரு தீர்வு கண்டுள்ளனர். அதன்படி, அடுத்த 10 ஆண்டுகளுக்கு 1 டிரில்லியன் டாலர் செலவுகள் குறைக்கப்படும். இது நான் பரிந்துரைத்த ஒப்பந்தமா? இல்லை.எனினும், நிதிப் பற்றாக்குறையால் ஏற்படும் சிக்கலில் இருந்து இந்த உடன்பாடு நம்மைக் காப்பாற்றும். அதோடு இதேபோன்ற நெருக்கடியை அடுத்த ஆறு அல்லது எட்டு அல்லது 12 வது மாதங்களில் நாம் சந்திக்கப் போவதில்லை என்பதையும் இந்த உடன்பாடு உறுதி செய்கிறது.இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.

பிரதிநிதிகள் சபை சபாநாயகர் ஜான் பாய்னர் அளித்த பேட்டியில்,'இது ஒன்றும் உலகின் மிகச் சிறந்த உடன்பாடு இல் லை தான். எனினும் தற்போதைய பிரச்னையைச் சமாளிக்க நாங்கள் எந்தெந்த பரிந்துரைகளை மாற்றினோம் என்பதைத் தான் இது காட்டுகிறது. வரி உயர்வு உள்ளிட்ட வெள்ளை மாளிகையின் கோரிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளன' என்றார்.இதன் மூலம் எதிர்க்கட்சியே தனது கோரிக்கைகளில் வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்கப் பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.



பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்:கடன் நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டதாக அதிபர் ஒபாமா அறிக்கை வெளியிட்டதை அடுத்து, அமெரிக்க, ஐரோப்பிய, ஆசியப் பங்குச் சந்தைகள் நேற்று காலை துவங்கிய போதே ஏற்றம் கண்டன.



தொடரும் சிக்கல்: கடன் நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டு விட்டதாக அதிபர் அறிவித்தாலும், இந்தத் தீர்வில், இரு கட்சியினருமே சில குறைகளைக் கண்டுபிடித்து குற்றம்சாட்டியுள்ளனர். இந்த தீர்வு மசோதாவாக வரையப்பட்டு, இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட வேண்டிய சூழலில் செனட் சபையில் வெற்றி பெற்று விடும் என்றும், பிரதிநிதிகள் சபையில் வெற்றி பெறுவது சந்தேகமே என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் 24 மணிநேரமே கெடு உள்ள நிலையில், நேற்று முன்தினம் எட்டப்பட்ட தீர்வு மசோதாவாக வெற்றி பெற்று, பின்னர் சட்டமாக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



வெறுப்பில் மக்கள்: அடுத்தாண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில், ஆதாயம் தேடுவதற்காக எதிர்க்கட்சியினர் இவ்விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள், பாதிக்கு மேற்பட்ட அமெரிக்க மக்களிடம்வெறுப்பையே உருவாக்கியுள்ளன.சமீபத்தில் சி.என்.என்., செய்தி நிறுவனம்நடத்திய கருத்துக் கணிப்பில், குடியரசுக் கட்சியினர் பொறுப்புடன் நடக்கவில்லை என 63 சதவீதம் பேரும், பொருளாதார வீழ்ச்சி நேரிட்டால்அதில் எதிர்க்கட்சிக்கும் பங்குண்டு என 51 சதவீதம் பேரும், இப்பிரச்னைக்கு காரணம் ஒபாமாதான் என 30 சதவீதம் பேரும், இரு கட்சிகளுமே தான் காரணம் என 15 சதவீதம் பேரும்கூறியுள்ளனர்.



உடன்பாடு தான் எனக்கு பரிசு: அமெரிக்கக் கடன் நெருக்கடிக்கு அந்நாட்டு நிதியமைச்சகம் விடுத்துள்ள கெடு இன்றோடுமுடிவடைகிறது. இந்நிலையில், அதிபர் ஒபாமாவின் 50 வது பிறந்தநாள், நாளை மறுநாள் வருகிறது. இதுகுறித்து பேட்டியளித்த அவர்,'எனதுபிறந்தநாள் பரிசு, 31ம் தேதியே கிடைத்து விட்டது. கடன் நெருக்கடிக்கான தீர்வைத் தான் குறிப்பிடுகிறேன். நான் 50 வயதிலும், சுறுசுறுப்பாக இருப்பதாக என் மனைவி மிச்சேல் கூறுகிறார்' என்றார்.








      Dinamalar
      Follow us