UPDATED : ஆக 20, 2011 09:52 AM
ADDED : ஆக 19, 2011 05:54 PM
இஸ்லாமாபாத்: வலுவான லோக்பால் மசோதாவை அமல்படுத்தக் கோரி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நடத்திய போராட்டம், சர்வதேச நாடுகளையும் இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அன்னாவின் போராட்டம், இந்தியாவிற்கு மட்டும் விடிவை கொண்டுவரப் போவது மட்டுமல்லாமல், நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும், இதுபோன்ற போராட்டத்தின் மூலம் அங்கு விடிவு பிறக்க வழிவகை செய்துள்ளது. இந்தியாவில், விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள வலுவான ஜன் லோக்பால் மசோதாவைப் போல, பாகிஸ்தான் பார்லிமென்டிலும் இதுபோன்ற மசோதாவை தாக்கல் செய்ய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாகிஸ்தானிய தொழிலதிபர் ராஜா ஜஹாங்கீர் அக்தர் தெரிவித்துள்ளார். 68 வயதான ஜஹாங்கீர் அக்தர் கூறியதாவது, பாகிஸ்தான் ஊழலில் சிக்கி திணறி வருகிறது. ஊழல் என்ற கொடிய அரக்கனிடமிருந்து நாட்டை காப்பாற்ற, ஹசாரே நடத்தியதைப் போன்ற போராட்டத்தினால் மட்டுமே முடியும். எனவே, இதுபோன்ற போராட்டத்தை, விரைவில் தான் துவக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.