sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சர்வாதிகாரி முஷாரப்பின் மறு அவதாரம் பாக்., ராணுவ தளபதி அசிம் முனீர்; பஹல்காம் படுகொலையின் சூத்திரதாரி

/

சர்வாதிகாரி முஷாரப்பின் மறு அவதாரம் பாக்., ராணுவ தளபதி அசிம் முனீர்; பஹல்காம் படுகொலையின் சூத்திரதாரி

சர்வாதிகாரி முஷாரப்பின் மறு அவதாரம் பாக்., ராணுவ தளபதி அசிம் முனீர்; பஹல்காம் படுகொலையின் சூத்திரதாரி

சர்வாதிகாரி முஷாரப்பின் மறு அவதாரம் பாக்., ராணுவ தளபதி அசிம் முனீர்; பஹல்காம் படுகொலையின் சூத்திரதாரி

9


ADDED : ஏப் 29, 2025 06:04 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 06:04 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியா - பாக்., இடையே தற்போது ஏற்பட்டுள்ள மோதலுக்கு முக்கிய காரணமாக கருதப்படுபவரே இந்த அசிம் முனீர் தான்.

இரு நாடு கோட்பாடு


கடந்த ஏப்., 17ல், இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு பொது நிகழ்வில், 'இருநாடு கோட்பாடு' என மத அடிப்படையில், அசிம் முனீர் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பேச்சு தான், பஹல்காம் தாக்குதலுக்கு துாண்டுகோலாக அமைந்தது.

அவர் பேசுகையில், ''வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், நாம் ஹிந்துக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். நம் முன்னோரும் அதைத்தான் நினைத்தனர். நமது மதம் வேறு; நமது பழக்கவழக்கங்கள் வேறு. நமது மரபுகள் வேறு. நமது எண்ணங்கள் வேறு. லட்சியங்கள் வேறு. இருநாட்டு கோட்பாட்டின் அடித்தளம், அங்குதான் அமைக்கப்பட்டது.

நாம் ஒரு தேசம் அல்ல; இரண்டு நாடுகள். அதனால்தான், இந்த நாட்டை உருவாக்க நமது முன்னோர் இடைவிடாத போராட்டம் நடத்தினர். இந்த நாடு உருவாக நாங்கள் நிறைய தியாகங்களைச் செய்துள்ளோம். அதை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். பாகிஸ்தானின் கதையை அடுத்த தலைமுறைக்கு ஒவ்வொரு பெற்றோரும் சொல்ல வேண்டும்,'' என்றார்.

பழமைவாதி


மத அடிப்படையில் நாடு அமைவது குறித்தும், ஒன்றிணைவது குறித்தும் பேசும் இவர், தீவிர பழமைவாத போக்கை கொண்டவர். இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை பூர்வீகமாக கொண்டவர். 1947ல் பாகிஸ்தான் உருவான பின், இவரது குடும்பத்தினர் ராவல்பிண்டி சென்று குடியேறினர்.

''பாகிஸ்தான் இளைஞர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தக்கூடாது. மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றக்கூடாது. இதற்காகவா, நாம் ஹிந்து நாட்டில் இருந்து பிரிந்து, புது நாட்டை உருவாக்கினோம்?' என கேள்வி எழுப்புகிறார்.

இவர் ராணுவ உயர் பதவிகளில் இருந்தாலும், அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் ஏற்கனவே ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பின் தலைமை இயக்குனராக இருந்தவர். கடந்த 2019ம் ஆண்டு, இந்திய - பாக்., மோதலின்போதும், இவர் ஐ.எஸ்.ஐ., பொறுப்பில் இருந்தார்.

கடந்த ஆண்டு நடந்த தேர்தல் தில்லுமுல்லுகளில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. ஷாபாஸ் ஷெரீப், பிலவால் கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கும் இவர் உதவினார்.

இம்ரான் கான் எதிர்ப்பு


சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 'முனீரின் சர்வாதிகார நடவடிக்கைகள் பாகிஸ்தானின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளன. ஜெனரல் அசிம் முனீர் உடனடியாக ராணுவத் தலைமைப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நடுநிலை ராணுவத் தலைமையால் தான், ஜனநாயக நெறிமுறைகளை பாதுகாக்கவும், நடைமுறைப்படுத்தவும் முடியும்' என கூறுகிறார். இரு நாட்களுக்கு முன், சிறையில் தன்னை சந்திக்க வந்த ஆதரவாளர்களிடம் இதே கருத்தை இம்ரான் கான் வலியுறுத்தி உள்ளார்.

தற்போது, 57 வயதான அசிம் முனீர், ஏற்கனவே பணி ஓய்வு பெற வேண்டியவர். 2027 நவம்பர் வரை பதவி நீட்டிக்கப்பட்டுள்ளார். ராணுவ தலைமை தளபதியாக நீடிக்கும்பட்சத்தில், ஜியா -உல்- ஹக், முஷாரப் போன்று ராணுவ சர்வாதிகாரியாக உருமாற வாய்ப்புள்ளது. 'இந்தியா தான் முதல் எதிரி' என அவர் செயல்பட்டு வருகிறார். பொதுமக்களிடையே அதிருப்தியையும், ராணுவ படை பிரிவுகள் இடையே கருத்து வேறுபாட்டையும் எதிர்கொண்டு வருகிறார்.

இந்த சிக்கலான சூழ்நிலையில், இவர் தான் பஹல்காம் படுகொலையை அரங்கேற்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தன்னிடமிருந்து ஆட்சியாளர்களின் கவனத்தைத் திசைதிருப்பவும், நாட்டு மக்களிடையே ராணுவம் மீதான ஆதரவு மற்றும் அனுதாபத்தை வளர்க்கவும், அவர் செய்துள்ள அரசியல் தந்திரம்.






      Dinamalar
      Follow us