பாக்., ராணுவ தளபதியின் மதக்கண்ணோட்டம்: ஜெய்சங்கர் சாடல்
பாக்., ராணுவ தளபதியின் மதக்கண்ணோட்டம்: ஜெய்சங்கர் சாடல்
ADDED : மே 22, 2025 04:54 PM

ஆம்ஸ்டர்டாம்: பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், தீவிர மதக்கண்ணோட்டத்தில் இயக்கப்படுகிறார். அவரது பேச்சுக்கு பிறகு தான் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர், என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
நெதர்லாந்து சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பஹல்காமில், சுற்றுலா பயணிகளை அவர்களின் மதத்தை உறுதி செய்த பிறகு குடும்பத்தினர் முன்பு பயங்கரவாதிகள் கொலை செய்தனர். காஷ்மீரின் முக்கிய பொருளாதாரமாக இருக்கும் சுற்றுலாத்துறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இச்செயல் நடந்துள்ளது. வேண்டும் என்றே மத முரண்பாட்டை உருவாக்குவதற்காகவும் செய்யப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானின் தலைமை, குறிப்பாக அதன் ராணுவ தளபதியான ஜெனரல் அசிம் முனீர் தீவிர மதக்கண்ணோட்டத்தில் இயக்கப்படுகிறார். அவர் வெளிப்படுத்திய கருத்துக்கும், பஹல்காமில் நடந்ததற்கும் தொடர்பு உள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.